Français
English
தமிழ்
27-12-2010, திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திரு. N. ரங்கசாமி தீவிர ஆதரவாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
புதுச்சேரி மாநிலம், எல்லப்பிள்ளைச்சாவடி, 100அடி சாலையில் அமைந்துள்ள N.T. திருமண மஹாலில் இன்று 27-12-2010, திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் 30 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் வருகைதந்த முன்னாள் முதல்வரும், எந்நாளும் மக்கள் முதல்வராக திகழும் திரு. N. ரங்கசாமி அவர்களின் தீவிர ஆதரவாளர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் முதல்வரும் முன்னாள் முதல்வருமான திரு. N. ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பணியாற்றிய காலம் புதுச்சேரியின் பொற்காலம்
    புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை ஆட்சி புரிந்த முதலமைச்சர்களில் மிகச்சிறந்த முதல்வராக அணைவராலும் நேசிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் திரு. N. ரங்கசாமி ஆவார். இதற்கு காரணம் அவர் முதலமைச்சராக இருந்த பொழுது அந்த பதவிக்குரிய புதிய இலக்கணத்தை வகுத்து எளிமையாகவும், நேர்மையானவராகவும், பொறுமைமிக்கவராகவும், செயல்மறவராகவும் செயலாற்றினார். அவர் ஆட்சி புரிந்த 71/2 ஆண்டுகாலம் புதுவையின் பொற்காலமாக திகழ்ந்தது.

பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவட்டை பின்பற்றி ஏழை எளிய மாணவர்களின் கனவுக்கல்வியாக இருந்த மருத்துவம், பொறியியல் மற்றும் உயர்கல்வி அனைத்தையும் இலவசமாக கற்க வழிவகை செய்தார். பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் இலவச கல்வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி குடிசையில்லா மாநிலமாக புதுச்சேரி மாநிலமாக புதுச்சேரி திகழ வித்திட்டவர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு எதிர்கால இந்தியாவை நிர்மாணிக்கின்ற பள்ளி குழந்தைகளுக்கும், மாணவ, மாணவியருக்கு காலையில் இலவச ரொட்டிப்பால் திட்டத்தினையும், முட்டையுடன் கூடிய மதிய சத்துணவினையும், மாலையில் பழம், பிஸ்கட் சத்தானபால் ஆகியவற்றை மூன்று வேலைக்கும் வழங்கி படிக்கின்ற குழந்தைகள் வழங்கி படிக்கின்ற குழந்தைகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நீங்க இடம் பெற்றுள்ளார். இத்துடன் இல்லாமல் கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு காலணி, குடை, மழைக்கோட்டு, புத்தகப்பை, அகராதி, இலவச நோட்டு புத்தகம், சீருடை, சைக்கிள், கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ஆண்டொண்றுக்கு ரூ.250 என அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி முழு கல்வி அறிவு பெற்ற முன்னோடி மாநிலமாக ஒளிரச்செய்தவர்.

ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசியும், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஆதரவாக உதவித்தொகையை உயர்த்தி எளிய முறையில் வழங்கியவர். இதனால் முதியோர்கள் அணைவரும் இன்றைக்கும் மகராஜன் வாழ்க என மனதார வாழ்த்துகிறார்கள். தொடர்ந்து அவர் பதவியில் இருந்தால் உதவித்தொகை படிப்படியாக ஏற்றம் கண்டு நாங்கள் நன்றாக வாழ்ந்திருப்போம் என்று இன்றும் நினைக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதுடன் கருணைத்தொகையும் உயர்த்திக் கொடுத்து வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்றியவர். விவசாயிகளுக்கு இயற்கை ஏற்படுத்திய பேரிடர் காலங்களில் விவசாயிகளை பாதுகாத்து விவசாய தோழனாக இருந்தார். 1839ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு பிறகு பராமரிப்பற்று கிடப்பில் கிடந்த பல அணைகளை சீரமைப்பதுடன் புதியதாக பல புதிய தடுப்பணைகளை கட்டி நீராதாரத்தை பெருக்கி நிலத்தடி நீரை உயர்த்தியவர்.

புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சார சின்னங்களாக இருந்த மூடிக்கிடந்த மூன்று பஞ்சாலைகளையும் திறக்கச் செய்து தொழிலாளர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர்.

ஆழிப்பேரலையின் (சுனாமி) கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உடனடியாக ஆறுதல் கூறி அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்ய இருக்க புதிய வீடுகளும் இழந்துவிட்ட புதிய படகுகளும், வலைகள் போன்ற உபகரணங்கள் அளித்து எல்லோருக்கும் மீனவ நண்பனாக திகழ்ந்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் செய்ய முடியாத ஒரு புதிய சாதனையாக அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தும் அரசு ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்து பதவி உயர்வுகளை வாரி வழங்கியவர்.

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டினை எல்லா நிலையிலும் பெற்றுத்தந்த சமூக நீதி கிடைக்கச்செய்தவர். டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவுகளில் ஒன்றான தலித் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வழி வகைச்செய்ய தனி பொருளாதார நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கித்தந்து அட்டவணை இனத்தவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். புதுவையின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்போராட்ட தியாகிகளுக்கு அவர்கள் செய்த தியாகத்தை பாராட்டி உதவித்தொகையை உயர்த்தி கொடுத்த உத்தமர்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பெண்களுக்கான சம உரிமையையும், சலுகைகளையும் வாரி வழங்கியவர். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற கோட்பாட்டில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கு தனி இடஒதுக்கீட்டினை வழங்கி சமூக நல்லிணக்கத்தினை காத்தவர்.

நஞ்சு கலக்காமல் பல பதிய தொழிற்சாலைகளை உருக்கித்தந்த தொழில் வித்தகர். அமைப்புச்சாராத் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட வாரியம் அமைத்தவர். இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் மீது வரிசுமத்தாமல் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து வரியில்லா பட்ஜெட்டை சமர்பித்த நல்லவர்.

இத்தகைய சாதனைகள் புரிந்து ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் செய்த மக்கள் முதல்வரை அரசியல் சுய லாபத்திற்காக பதவி ஆசை பிடித்த ஒரு சிலர் தங்களுடைய பதவி சுகத்திற்காகவும், மந்திரி பதவி பெறுவதற்காகவும் பதவியில் இருந்து நீக்கியதை மக்கள் மன்றம் இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறது.

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி அதற்கு தலைமையேற்க வாருங்கள்!
    மக்கள் எண்ணங்களுக்கு மாறாக தற்போதைய ஆட்சியாளர்கள் சுய நல ஆட்சியை நடத்தும் விதத்தினால் மாநில வளர்ச்சியை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகாரத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்டவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமே முன்னேறுகிறதே தவிர ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சொல்லமுடியாத அளவிற்கு பாழடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி சீர்குலைத்து விட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மக்கள் முதல்வர் திரு. N. ரங்கசாமி அவர்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டு மக்கள் பரிதவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலவசமாக வழங்கப்படுகின்ற வேட்டி, சேலை முதற்கொண்டு இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மழை நிவாரணம் வழங்குவது வரை தற்போதைய ஆட்சியாளர்கள் செய்கின்ற குளறுபடியால் மக்கள் அலைக்கழிக்கின்ற, அவதியுறுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல மக்கள் முதல்வர் அமைத்திட மக்கள் விரும்புகின்றனர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற மூதறிஞர்களின் கருத்தினை மெய்பிக்கின்ற வகையில் தாங்கள் உணர்வீர்கள். எங்கள் உள்ளக்கிடக்கினையும், மக்களுடைய எண்ணங்களையும் உணர்ந்து புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி தலைமையேற்க வாருங்கள் என்று மக்கள் அழைக்கின்றார்கள் நாங்களும் அழைக்கின்றோம். எனவே தாங்கள் இந்த கருத்தினை ஏற்று மக்களுக்காக செயல்படவேண்டும் என்று இந்த கூட்டம் ஏகமனதாய் தீர்மானம் செய்கிறது. திரு N. ரங்கசாமி அவர்களின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து பேரவைகளும் ஒருங்கிணைந்து ஓரணியாக நின்று முதல்வர் அவர்கள் அறிவிக்கின்ற அரசியல் இயக்கமாக மாறும்.
திரு N. ரங்கசாமி அவர்களின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து பேரவைகளும் ஒருங்கிணைந்து ஓரணியாக நின்று முதல்வர் அவர்கள் அறிவிக்கின்ற அரசியல் இயக்கமாக மாறும்.
    மக்கள் சக்தியை திரட்டி புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கிட புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் நிறைந்திருக்கும் மக்கள் முதல்வர் N. ரங்கசாமி அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இதுநாள் வரையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்துப் பேரவைகளும், மற்ற அமைப்புகளும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து ஓரணியாக நின்று புதிய சக்தியாகவும், புதிய அரசியல் இயக்கமாக மாற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதிவு கிடைத்தவுடன் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதிக்கான கமிட்டிகள், மற்றும் பல்வேறு முன்னனி அமைப்புகளுக்கான நிர்வாகக்குழு பட்டியல்கள் வெளியிடப்படும். அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு வெகு விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும். இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநிலத்தின் (காரைக்கால், மைஹே, ஏனம் உள்பட) அனைத்து பகுதிகளில் இருந்தும் குறைந்தபட்சம் சுமார் 1லட்சம் பேர் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இதற்கான தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.